Home / உள்நாட்டு செய்திகள் / துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலி!!

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலி!!

லுனுகம்வெஹர – பெரலிஹேல பகுதியில் இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட முறுகல் நிலைக்கு இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் மேலும் இரண்டு பேர் காயமடைந்து தெபரவெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர் மேலும் 15 இற்கும் மேற்பட்டவர்களுடன் பெரலிஹேல பகுதியில் வீடொன்றில் நேற்றைய தினம் மதுபான விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது முறுகல் நிலை ஏற்பட்டிருந்த நிலையில், சிலர் அங்கிருந்து வெளியேறினர்.

பின்னர் அவர்கள் மீண்டும் அங்கு வந்து இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

சம்பவத்தில் திஸ்ஸமஹாராம – எல்லகல பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

233 கிலோ கஞ்­சா­வு­டன் கடற்­ப­ரப்­பில் பய­ணித்த இரு­வர் கைது!!

யாழ்ப்­பா­ணம்,  வட­ம­ராட்சி கிழக்கு மாமு­னைக் கடற்­ப­ரப்­பில் கஞ்­சா­வு­டன் பய­ணித்த பட­கைக் கைப்­பற்­றி­யுள்­ள­தா­கக் கடற்­ப­டை­யி­னர் தெரி­வித்­த­னர். படகில் பய­ணித்த மரு­தங்­கே­ணி­யைச் சேர்ந்த ...

%d bloggers like this: