Home / உலகச் செய்திகள் / துக்க தினத்திற்கு மத்தியில் புதையுண்ட குழந்தைகள்!

துக்க தினத்திற்கு மத்தியில் புதையுண்ட குழந்தைகள்!

ரஷ்யாவில் தீ விபத்தால் பலியானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் சைபீரியா மகாணத்தில் உள்ள கொம்ரோவா நகரில் உள்ள வின்ட்டாட செர்ரி வணிக வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 41 குழந்தைகள் உட்பட 64 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட ரஷ்யா அதிபர் புதின் இன்று தேசிய துக்க தினம் என அறிவித்துள்ளார். இதன் காரணமாக இன்று கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு, தொலைக்காட்சியில் வேடிக்கை நிகழ்ச்சிகள் தடை செய்து, ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது.

About இனியவன்

x

Check Also

நாடு கடத்தும் தீர்ப்பு வெளியாகியும் அதிர்ச்சி அடையாத விஜய்மல்லையா

என்னை நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் கோர்ட் அளித்த தீர்ப்பினால் அதிர்ச்சி அடைய ஏதுமில்லை என விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார். ...

%d bloggers like this: