Home / உலகச் செய்திகள் / தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பேருந்தில் பயணித்த 28 பேர் பலி!!

தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பேருந்தில் பயணித்த 28 பேர் பலி!!

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பேருந்தில் பயணித்த 28 பேர் பலியாகினர்.

அந்நாட்டின் ஃபரா மாகாணத்தில், பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கந்தாஹர்- ஹேரத் (Kandahar-Herat) தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றபோது, சாலையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து பேருந்து சிதறியது. இதில் பேருந்தில் பயணித்த, குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மேலும் 10க்கு மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீவிரவாத தாக்குதலை ஃபரா மாகாண ஆளுநர் அலுவலகம் உறுதி செய்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு எதுவும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வரும் தீவிரவாத தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முயன்று வரும் நிலையில், கடந்த ஒரு மாதமாக தீவிரவாத தாக்குதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் மேலதிக தகவல்

பிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் ...