Home / சமையல் / தீபாவளி ஸ்பெஷல் முள்ளு முறுக்கு..!

தீபாவளி ஸ்பெஷல் முள்ளு முறுக்கு..!

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு – ஒரு கப்,
உளுத்த மாவு – ஒரு டீஸ்பூன்,
பொட்டுக்கடலை மாவு – ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்த மாவு, பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதமாக பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு மாவை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் போட்டு பிழிந்து வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான முள்ளு முறுக்கு ரெடி.

About கலைப்பிரியன்

x

Check Also

பைனாப்பிள் சுவிஸ் ரோல் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான பைனாப்பிள் சுவிஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ...

%d bloggers like this: