Home / உள்நாட்டு செய்திகள் / திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் லொறியும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி  விபத்து!

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் லொறியும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி  விபத்து!

திருகோணமலை – தம்பலகாமம், 95ஆம் கட்டை பகுதியில் லொறியொன்றும், டிப்பர் வாகனமொன்றும், நேருக்கு நேர் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த இந்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் லொறியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து சீமெந்து ஏற்றி வந்த லொறியும், கந்தளாயில் இருந்து கப்பல்துறை பகுதிக்கு சென்ற டிப்பர் வாகனமுமே விபத்திற்கு இலக்காகியுள்ளன.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: