Home / உள்நாட்டு செய்திகள் / திருகோணமலையில் இன்று காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதேச கூட்டம்

திருகோணமலையில் இன்று காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதேச கூட்டம்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதேச கூட்டம்  திருகோணமலையில் இன்று நடைபெறவுள்ளது.

 

இந்த அலுவலகத்திற்கு உட்பட்ட ஏழு ஆணையாளர்களும், காணாமல் போனோர் குடும்ப உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடகங்களுடன் இணைந்து, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்;டறிவார்கள்.

 

பொதுமக்களுடன் மேற்கொள்ளப்படும் இந்தத் தொடர்பாடல் வேலைத்திட்டம் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரையில், மன்னார், முல்லைத்தீவு, மாத்தறை மாவட்டங்களில் இந்த தொடர்பாடல் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி பிரதேசத்திற்கான சந்திப்பு எதிர்வரும் வியாழக்கிழiயும், யாழ்ப்பாணத்திற்கான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இந்த சந்திப்பு இடம்பெறவிருக்கிறது.

 

இதேவேளை, பிரதேச மட்டங்களில் அலுவலகங்களை ஸ்தாபிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் எட்டு அலுவலகங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவிருப்பதாக காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

About இனியவன்

x

Check Also

யாழ் காரைநகர் கும்பநாயகி அம்மன் ஆலயக் கொடியேற்றம் இன்று ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு கும்பநாயகி அம்மன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் ...

%d bloggers like this: