Home / உள்நாட்டு செய்திகள் / திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை!!

திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை!!

மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

பொறளை – கிங்ஸி ஹோட்டன் சந்தியில், அவர் பயணித்த மகிழுந்து முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான முச்சக்கரண்டிச் சாரதி, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாகன விபத்து இடம்பெற்ற போது திமுத் கருணாரத்ன மது போதையில் இருந்த காரணத்தினால் காவல் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில். காவல்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட திமுத் கருணாரத்னவை, நாளைய தினம் புதுக்கடையில் உள்ள 7ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை

வடக்கு மாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு ...

%d bloggers like this: