Home / உலகச் செய்திகள் / திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்ரிக் கழிவு-அதிர்ந்து போயுள்ள ஆராய்ச்சியாளர்கள்!!

திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்ரிக் கழிவு-அதிர்ந்து போயுள்ள ஆராய்ச்சியாளர்கள்!!

பிலிப்பைன்சின் மபினி நகரில் உள்ள கடலில் 16 அடி நீளம் கொண்ட திமிங்கலத்தின் வயிற்றுக்குள் சுமார் 40 கிலோ பிளாஸ்ரிக் கழிவுகள் தேங்கியிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

உலகிலுள்ள பெருங்கடல்களில் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் டன் பிளாஸ்ரிக் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் 2050- இல் கடலில் மீன்களைவிட பிளாஸ்ரிக் கழிவுகள் அதிகமாக இருக்கும் என கடந்த ஆண்டு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கழகம் தெரிவித்தது.

இந்நிலையில் பிலிப்பைன்சின் படாங்காஸ் மாகாணம் மபினி நகரில் உள்ள கடலில் சுமார் 16 அடி நீளம் கொண்ட திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் அந்த திமிலங்கத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது அதன் வயிற்றுக்குள் சுமார் 40 கிலோ பிளாஸ்ரிக் கழிவுகள் தேங்கியிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயுள்ளனர். பிளாஸ்ரிக் கழிவுகள் வயிற்றில் தேங்கியதால் முறையாக இரை உண்ண முடியாமல் தவித்துவந்த அந்த திமிங்கலம் நோய்வாய்பட்டு இறந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

ராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ மருத்துமனையில் ஏற்பட்ட பயங்கர  குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷே ...

%d bloggers like this: