Home / சினிமா செய்திகள் / திட்டம் போடத் தெரியல: பாடல் வெளியானது!

திட்டம் போடத் தெரியல: பாடல் வெளியானது!

கோலமாவு கோகிலா படத்துக்காக அனிருத் இசையமைத்து, நடித்திருக்கும் ‘திட்டம் போடத் தெரியல’ விளம்பர பாடல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் கோலமாவு கோகிலா.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான், வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து, நயன்தாரா நடிபில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் “எதுவரையோ” என்னும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டனர். பின்னர் இப்படத்தின் இரண்டவாது பாடலான “கல்யாண வயசு” எனும் பாடலினை கடந்த மே 17-ம் நாள் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த இருப்பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் மூன்றாவது பாடலான “ஒரே ஒரு” எனும் பாடல் கடந்த கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியாகி பலத்த வரவேற்பினை பெற்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட தணிக்கைக் குழு சோதனைக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது ‘கோலமாவு கோகிலா’ படத்துக்காக அனிருத் இசையமைத்து, நடித்திருக்கும் ‘திட்டம் போடத் தெரியல’ விளம்பர பாடல் வெளியாகவுள்ளது.

நயன்தாரா நடித்திருக்கும் இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

About இனியவன்

x

Check Also

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஸ்ரீதேவி பங்களாவின் டீசர் வெளியாகிது

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை சித்தரிக்கும் புதிய பாலிவுட் திரைப்படமான ஸ்ரீதேவி பங்களாவின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் வேடத்தில் ...

%d bloggers like this: