Home / உள்நாட்டு செய்திகள் / தாமரை கோபுரத்தின் நினைவாக முத்திரை வெளியீடு..!!

தாமரை கோபுரத்தின் நினைவாக முத்திரை வெளியீடு..!!

கொழும்பு, டி. ஆர்.விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் உயரமான கோபுரமாக அமையப்பெற்றுள்ள தாமரை கோபுரம் (Lotus Tower) எதிர்வரும் 16ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மாலை 5 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த கோபுரத்தின் நினைவாக அன்றைய நாள் இலங்கை தபால் திணைக்களத்தினால் முத்திரை மற்றும் தபால் உறை வெளியிடும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த முத்திரை 45.00 ரூபா பெறுமதியில் வெளியிடப்படவுள்ளது. இதனை கலைஞர் பசுபிட்டியேஜ் இசுரு சதுரங்கா (Pasupitiyage Isuru Chaturanga). உருவாக்கியுள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

356 மீற்றர் உயரமான இந்த தாமரைக் கோபுரம் 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் 300 மீற்றர் உயரமான ஈபில் கோபுரத்தினை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2012 ஆம் ஆண்டு சீன நிறுவனத்துடன் இணைந்து இதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் நிறைவுற்று திறந்து வைக்கப்படுகின்றது.

நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ , பராளுமன்ற உறுப்பினர்கள், சீன தூதுவர் உட்பட வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த இன்று பதவியேற்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில் இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக ...