Home / உள்நாட்டு செய்திகள் / தாமரைக் கோபுரம் இன்று திறப்பு..!!

தாமரைக் கோபுரம் இன்று திறப்பு..!!

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரம் இன்று (16) திறக்கப்படவுள்ளது.

தாமரைக் கோபுரமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

350 மீற்றர் உயரமான 17 மாடிகளைக் கொண்ட இந்தக் கோபுரம், 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதில் 80 வீதமான நிதி சீன அரசாங்கத்தின் நன்கொடையாகும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

நட்சத்திர விடுதி, ஹோட்டல்கள், கேட்போர் கூடம், மாநாட்டு மண்டபம் உள்ளிட்ட பல வசதிகள் இந்தத் தாமரைக் கோபுரத்தில் காணப்படுகின்றன.

இதேவேளை, தாமரைக் கோபுரத்தின் திறப்புவிழாவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையை வௌியிட இலங்கை தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

45 ரூபா பெறுமதியான முத்திரை, நினைவுப் பத்திரம் மற்றும் கடித உறை ஆகியன இன்றைய தினம் வௌியிடப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (26) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 135 பேர் ...

%d bloggers like this: