Home / உள்நாட்டு செய்திகள் / தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்படவேண்டும்…

தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்படவேண்டும்…

ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது கைதுசெய்யப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டதுபோல் தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்படவேண்டும் என்று எதிக்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் இழப்பீடுகள் குறித்த அலுவலகமும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பாராளுமன்னத்தில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (10)இடம்பெற்ற இழப்பீட்டு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்பே பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு பதிலாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடாது னெ;றும் கேட்டுக்கொண்டார்.

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை. அவர்களால் வழங்கப்பட்ட வாக்குமூலங்களைத் தவிர எந்த ஆதாரமும் கிடையாது எதிர்க்கட்சித்தலைவர் என்று தெரிவித்த

அநீதியான முறையில் அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேச கோட்பாடுகளுக்கு முரணானச் செயலாகும். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டங்கள் இடம்பெற்றுவருவதையும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா:

அரசியல் கைதிகள் என்ற சொற் பிரயோகமானது இன்று நேற்றல்ல, 1940களில் அன்றைய அரசு சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் சிலரை கைது செய்து,சிறையில் அடைத்தது முதல் இந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற சொற் பிரயோகமாகும். அதன் பின்னர் 1971இ 1988 – 89 காலகட்டங்களிலும் தென்பகுதியில் ஏற்பட்டிருந்த சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சிகளின்போது இந்த சொற் பிரயோகம் மிகவும் அழுத்தமாகப் பிரயோகிக்கப்பட்டும் வந்திருந்தது.

அதன் தொடர்ச்சியாகவே நாங்கள் இந்த தமிழ் அரசியல் கைதிகளின் தடுப்பினையும் பார்க்க வேண்டியுள்ளது. இவர்கள் பாதாள உலகக் கோஸ்டியினர் அல்லர். தங்களது சுயத்திற்காக சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டோரும் அல்லர்.

தமிழ் மக்களின் விடுதலை நோக்கியப் போராட்டத்தின் ஒரு காலகட்டத்தில் விரும்பி இணைந்தோ அல்லது பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்டோ செயற்பட்டவர்கள் என்ற அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். .

தமிழ் அரசியல் கைதிகள் தாங்களும் வாழ்வதற்காகவே போராடி வருகின்றனர். நீதி, நியாயம் கோருகின்றனர். இவர்களை வைத்து, வெளியில் இருந்து யாரும் அரசியல் செய்வதற்காக அல்ல. இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள். இலங்கையின் சட்டத்தின் பிரகாரம் குற்றம் ஒன்றினை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாரினால் கைதிகளிடமிருந்து பெறப்படுகின்ற வாக்குமூலம் பயன்படுத்த இயலாது

2015ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் நான்காவது செயற்பாட்டுப் பிரிவின் மூன்றாவது விடயத்திற்கு ஏற்ப, இழப்புகளுக்கான நட்டஈடு வழங்கும் அலுவலகம் அமைப்பது தொடர்பில் இன்று நாங்கள் விவாதங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

 

 

About இனியவன்

x

Check Also

பதுளை மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்!!

பதுளை மாவட்டத்தின்  பல  பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ பதுளை ...

%d bloggers like this: