தமிழீழ தேசியத் தலைவரது புகைப்படத்துடன் பொருத்தமற்ற வேறொரு தலைப்பில் தீபம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டதால், ஆத்திரமடைந்த பருத்தித்துறை மக்கள் தீபம் வாரப் பத்திரிகைகளை தீ இட்டு கொழுத்தி உள்ளனர்.
விடுதலைப் போராட்டத்தை அதன் வரலாற்றை திரிபுபடுத்தி கதை சொல்லும் நாளிதழ் தனது பரபரப்பிற்கு இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்டார் தேசிய தலைவரென முன்பக்க தலைப்பிட்டு தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புகைப்படத்துடன் இம்முறை தனது வெளியிட்டை பிரசுரித்திருந்தது.
தமிழக கொலையாளி ஒட்டோ சங்கர் கதைக்கு இத்தகைய தலைப்பிட்டு மலின விளம்பரம் தேட முற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
அத்தோடு இழுத்து மூடப்படும் நிலையினை அடைந்துள்ள வார இதழை பிரபல்யப்படுத்த இத்தகைய நாடகத்தை அரங்கேற்றுவதாக சொல்லப்படுகின்றது.
மேலும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பில் திரிபுபடுத்தப்படுகின்ற கதைகளை புளொட் சித்தார்த்தன் மற்றும் சிவராம் கொலையாளி ஆர்.இராகவன் ஆகியோரது ஆலோசனையில் பலமுறை குறித்த இதழ் பிரசுரித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.