Home / உள்நாட்டு செய்திகள் / தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!!!

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!!!

தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பில் நாடளாவிய ரீதியில் சுமார் 26 000 ஊழியர்கள் பங்கேற்றதாக, தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கை, நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதால் தபால் ஊழியர்கள் சேவைக்கு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இதேவேளை, ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றை இன்றைய தினத்திற்குள் விநியோகிப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சேவையில் இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்வுகள் இதுவரை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: