Home / சினிமா செய்திகள் / தனுஷின் ஆங்கில படத்திற்கு பாராட்டு

தனுஷின் ஆங்கில படத்திற்கு பாராட்டு

நடிகர் தனுஷ் ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இதனால், தமிழில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் ராஞ்சனா, ஷமிதாப் உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்தார். The Extrodinary of the Fakir என்ற அந்தப் படம் சமீபத்தில் பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் வெளியாகி, மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

நார்வே சர்வதேசத் திரைப்பட விழா மற்றும் பார்சிலோனா சர்வதேசத் திரைப்பட விழா உள்ளிட்ட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டு, சிறந்தப் படத்துக்கான விருதுகளையும், இந்தப் படம் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் இதுவரை வெளியாகாத இந்தப் படம், சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் வெளியானது. அங்கும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற, ஒட்டுமொத்த படக் குழுவும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறது.

ஸ்பெயினிலும் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் கென் ஸ்காட், ஸ்பெயின் நாட்டு மக்களும் நடிகர் தனுஷின் நடிப்பை ரசிக்கின்றனர். அதனால்தான், படம் முழு வெற்றி பெற்று இருக்கிறது என, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதற்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்திருக்கிறார்.

விரைவில், அந்தப் படத்தை இந்தியாவிலும் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.

About இனியவன்

x

Check Also

நடிகர் சூர்யாவுக்கு கமல் ஆதரவு!!

சிவகுமார் கல்வி அறக்கட்டளை நடத்திய விழாவில் நடிகர் சூர்யா, மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கையை ...

%d bloggers like this: