Home / உள்நாட்டு செய்திகள் / தனி­யார் நிறு­வ­னம் ஒன்­றின் 300 வரை­யி­லான தொழில் வெற்றிடங்களுக்கு ஆள்சேர்ப்பு!

தனி­யார் நிறு­வ­னம் ஒன்­றின் 300 வரை­யி­லான தொழில் வெற்றிடங்களுக்கு ஆள்சேர்ப்பு!

நாடு முழு­வ­தும் கிளை­க­ளைக் கொண்­டுள்ள தனி­யார் நிறு­வ­னம் ஒன்­றின் 300 வரை­யி­லான தொழில் வெற்­றி­டங்­க­ளுக்­கான ஆள்ச்­சேர்ப்பு யாழ்ப்­பா­ணத்­தில் நாளை­ ம­று­தி­னம் வியா­ழக்­கி­ழமை காலை 8 மணி தொடக்­கம் மதி­யம் ஒரு மணி­வரை நடைபெறுகின்றது.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் தொழில்­வாய்ப்­புக்­க­ளைப் பெருக்கி தொழில்­வாய்ப்­பற்­றோ­ரின் எண்­ணிக்­கையைக் குறைப்­ப­தற்­காக யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தின் தொழில் நிலை­யத்­தி­னால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் செயற்­பா­டு­க­ளுக்கு அமைய இந்த ஆள்ச்­சேர்ப்பு இடம்­பெ­ற­வுள்­ளது.
இந்த நேர்­மு­கத் தேர்­வில் G.C.E சாதா­ரண தரம் வரை கல்வி கற்­ற­வர்­கள்,மற்­றும் G.C.E உயர்­த­ரம் கற்­ற­வர்­கள் ­விண்­ணப்­பிக்க முடி­யும்.

18–27 வய­துக்குட்­பட்ட பெண்­கள் மற்­றும் 18–40 வய­துக்குட்­பட்ட ஆண் விண்ணப்­ப­தா­ரி­க­ளும் நேர்­மு­கத் தேர்­வில் பங்­கு­பற்­ற­ மு­டி­யும்.

மேல­திக தக­வல்­க­ளைப் பெற 0212219359 என்ற தொலை­பேசி இலக்­கத்­தி­னு­டாக தொடர்­பு­கொள்­ளு­மாறு யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் அறி­வித்­துள்­ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: