Home / இந்திய செய்திகள் / தனக்காக எதையும் வேண்டி கோவிலுக்குச் செல்வதில்லை-பிரதமர் மோடி

தனக்காக எதையும் வேண்டி கோவிலுக்குச் செல்வதில்லை-பிரதமர் மோடி

கேதார்நாத் கோவிலில் இன்று மீண்டும் வழிபட்ட பிரதமர் மோடி, தனக்காக எதையும் வேண்டி கோவிலுக்குச் செல்வதில்லை என தெரிவித்துள்ளார்.வெளிநாடுகளுக்கு செல்வதில் தவறில்லை என்றாலும், உள்நாட்டிலும் எல்லா இடங்களையும் மக்கள் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.

2 நாள் பயணமாக நேற்று உத்தரகாண்ட் சென்ற பிரதமர் மோடி, கேதர்நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். கேதார்நாத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இதன் பின்னர் கேதார்நாத்தில் உள்ள புனித குகைக்கு காவி உடையில் சென்று தியானத்தில் ஈடுபட்டார். தியானத்தை முடித்துக் கொண்டு இன்று காலை மீண்டும் கேதார்நாத் கோவிலில் வழிபட்டார்.

கேதார்நாத்தில் கோவிலுக்கு வெளியே திரண்டிருந்த பக்தர்களை பார்த்து கையசைத்த வண்ணம் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, தாம் செய்த பணிகளை எண்ணிப் பார்க்கும் வகையில், தனிமையில் 2 நாட்களை கழிப்பதற்கு அனுமதி அளித்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஆன்மிக ஒளியூட்டப்பட்ட புனித தலங்களுக்கு செல்வதை பெருமையாக கருதுவதாகத் தெரிவித்த அவர், பிரார்த்தனையின்போது எதுவும் கேட்பதில்லை என கூறினார்.

தேர்தல் வெற்றிக்காககூட பிரார்த்திக்கவில்லையா என ஒரு செய்தியாளர் கேட்டபோது. இல்லை என பதிலளித்த பிரதமர், எல்லாவற்றையும் இறைவன் நமக்கு வழங்கியிருப்பதாக தாம் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் கடவுளின் ஆசிகள் இருக்க வேண்டும் என்பதே தமது பிரார்த்தனை என அவர் தெரிவித்தார்.

கேதார்நாத்திற்கும் தனக்கும் உணர்வுபூர்வமான பிணைப்பு இருப்பதாகக் குறிப்பிட்ட மோடி, 2013ஆம் ஆண்டு பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்குப் பிறகு கேதார்நாத் மறுசீரமைப்புக்கு திட்டம் தீட்டியதாக கூறினார்.

மக்கள் அனைவரும் நாட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என கூறிய பிரதமர், வெளிநாடுகளுக்கு செல்வது தவறில்லை என்றாலும், உள்நாட்டிலும் வெவ்வேறு இடங்களுக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு!!

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரண் ...

%d bloggers like this: