Home / இந்திய செய்திகள் / தந்தையின் கண்முன்னே மகள் 6 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம்!

தந்தையின் கண்முன்னே மகள் 6 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம்!

பீகாரில் 19 வயதான இளம்பெண், தந்தையின் கண்முன்னே 6 பேரால் கொடூரமாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

கிஷன்கஞ்ச் மாசட்டத்தில் உள்ள கோதிவாடி Kodhiwadi என்ற கிராமத்தில் வீடு ஒன்றில் நுழைந்த கும்பல் அங்கிருந்த தந்தை மற்றும் மகளை சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆட்கள் நடமாட்டமற்ற இடத்துக்கு எடுத்துச் சென்று தந்தையைத் தாக்கி மரத்தில் கட்டிவைத்து தந்தையின் கண்முன்னே மகளை கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள்.

இதுகுறித்து வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவோம் என மிரட்டிச் சென்ற நிலையில், தந்தை கோதிவாடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனைத் தொடர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தேடி வருவதாக எஸ்.பி.குமார் ஆசிஸ் தெரிவித்துள்ளார்.

 

About அகமுகிலன்

x

Check Also

மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழப்பு!!

பீகாரில் மர்ம நோயால் தாக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரின் முசாபர்பூர் ...

%d bloggers like this: