Home / உலகச் செய்திகள் / தண்ணீர் கிடைக்காமல் கழிவு நீர்க் கால்வாய்களில் தண்ணீர் பிடிக்கும்-வெனிசுலா மக்கள்!!

தண்ணீர் கிடைக்காமல் கழிவு நீர்க் கால்வாய்களில் தண்ணீர் பிடிக்கும்-வெனிசுலா மக்கள்!!

வெனிசுலா நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு காரணமாக மக்கள் நீரும் உணவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதிபர் நிகோலஸ் மதுரோ பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 7-ஆம் தேதி முதல் நாட்டின் பல்வேறு நகரங்களில் மின்வெட்டு காரணமாக மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.

தண்ணீர் வினியோகமும் மின்சாரத்தைச் சார்ந்தே இருப்பதால் குளிக்கவும், குடிநீர், உணவு தயாரிப்பு உள்ளிட்ட பிற தேவைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் அவதியுறும் மக்கள் கழிவு நீர்க் கால்வாய்களில் போட்டி போட்டுத் தண்ணீர் பிடிக்கும் அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குளிர்சாதனங்கள் இயங்காததால் சேமித்து வைக்கப்பட்ட உணவுகளும் கெட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை சார்ந்து செயல்படும் தொழில் நிறுவனங்கள் கடைகளும் முடங்கியுள்ளன.

மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பேருந்துகளில் கடும் நெரிசல் நிலவுகிறது. இந்த நிலையில் மின் நிலையங்கள் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

கஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு!!

இந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் ...

%d bloggers like this: