Home / இந்திய செய்திகள் / தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்!!

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், வருகிற திங்கள் கிழமை முதல் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும் தனித்தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது தடை செய்யப்பட்டபிளாஸ்டிக் பயன்படுத்துவது உறுதிசெய்யப்பட்டால் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

அந்தவகையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்பவர்களுக்கு 1 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரையும், பிளாஸ்டிக் விநியோகம் செய்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் வரையும் அபராதம் வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது..

வணிக வளாகங்கள், பெரிய உணவகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையும், நடுத்தார உணவகங்கள், கடைகளுக்கு ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையும், சிறு குறு வணிகத்துக்கு 100 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழப்பு!!

பீகாரில் மர்ம நோயால் தாக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரின் முசாபர்பூர் ...

%d bloggers like this: