Home / உலகச் செய்திகள் / டேவிட் வோர்னரின் அதிரடி அறிவிப்பு.!

டேவிட் வோர்னரின் அதிரடி அறிவிப்பு.!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டுள்ள 12  மாத கால தடைப் பின்னர் அவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாடமாட்டேன் என டேவிட் வோர்னர்   கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

பந்தை சேதப்படுத்திய செலுக்காக ஸ்டீபன் ஸ்மித், டேவிட் வோர்னர் ஆகியோருக்கு  12 மாத கால தடை விதிக்கப்பட்டது. அத்துடன் இருவரினதும் பதவிகளும் பறிக்கப்பட்டன. பந்தை சேதப்படுத்திய பான்கிரொப்டுக்கு 9 மாத கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வோர்னர் நேற்று அளித்த பேட்டியின்போது கண்ணீர் மல்க தனது செயலுக்கு வருத்தப்பட்டார்.

இது தொடர்பாக சிட்னியில் அவர் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:-

அவுஸ்திரேலியாவை மோசமான முறையில் கீழே விழ வைத்துவிட்டேன். ஒருநாள் உங்களிடம் மீண்டும் நம்பிக்கையையும், மதிப்பையையும் பெறுவேன் என்று நம்புகிறேன். எனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டேன்.

நான் மீண்டும் அணிக்காக விளையாட விரும்புகிறேன். ஆனால் அவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் ஒருபோதும் நடக்காது என்பதை உறுதி அளிக்கிறேன். நான் ராஜினாமா செய்கிறேன். அவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாட மாட்டேன். நான் நேசித்த எனது அணியுடன் விளையாடப் போவதில்லை என்பதை நினைத்தால் இதயம் வலிக்கிறது.

தென் ஆபிரிக்காவில் நடந்ததற்கு நான் தான் முழுக்காரணம். அது மன்னிக்க முடியாத குற்றம். எனக்கான மன்னிப்பை பெற நீண்ட காலமாகும். எனது அணியினர் தென் ஆபிரிக்காவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது நான் இங்கு இருப்பது மனதுக்கு வலியை ஏற்படுத்துகிறது. அவுஸ்திரேலிய மக்களிடமும் எனது குடும்பத்தினருடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வோர்னர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய நிருபர்களின் சில கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக வோர்னர் டுவிட்டரில் கூறும்போது, “ உங்களது கேள்விகளுக்கு பதில் சொல்லாதது எனக்கு தெரிகிறது. இதை என்னால் முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் அனைத்து விசாரணைகள் முடிந்த பிறகே பதில் தெரியும். சரியான நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் சரியான இடத்தில் பதில் அளிக்கப்படும்” என்றார்.

About இனியவன்

x

Check Also

சட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு- கனடா நாடாளுமன்றம் ஒப்புதல்

உற்சாகத்தில் கஞ்சா பயன்படுத்துவதை சட்டம் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது ஏற்கனவே, பல நிலைகளை கடந்து வந்திருந்த இந்த சட்டம் கடைசியாக ...

%d bloggers like this: