Home / உலகச் செய்திகள் / டென்மார்க் நாட்டில் தொடங்கிய வெளிச்சத் திருவிழா!

டென்மார்க் நாட்டில் தொடங்கிய வெளிச்சத் திருவிழா!

டென்மார்க் நாட்டில் தொடங்கியது வெளிச்சத் திருவிழா

துருவத்தை ஒட்டி உள்ள அந்நாட்டில் பிப்ரவரி மாதம் தோறும் இரவின் நீளம் அதிகமாக இருக்கும். மாலை 5 மணி கவிழும் இருள், காலை எட்டுமணி வரை நீங்குவது இல்லை.

இந்த காலகட்டங்களில் வண்ண விளக்குகளை ஏற்றி வெளிச்சத் திருவிழா கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ள டென்மார்க் நாட்டினர், நடப்பு ஆண்டிலும் வண்ணங்களை வாரி இறைக்கும் விளக்கு அலங்காரங்களை செய்துள்ளனர்.

இந்த ஏற்பாடுகளால் அந்நாட்டின் கோபன்கேகன் நகரம் வர்ணஜாலத்தில் மூழ்கி உள்ளது. இருளின் மடியில் பூத்துக் கிடக்கும் வண்ண விளக்குகளை காண, உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி பன்னாட்டு பயணிகளும் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு!!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது. பிரித்தானியாவின் ப்ரென்ட் சந்தையில் ஒரு பீப்பாய் ...

%d bloggers like this: