Home / உள்நாட்டு செய்திகள் / டிக் டொக்கில் இணைந்த மங்கள சமரவீர

டிக் டொக்கில் இணைந்த மங்கள சமரவீர

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர காணொளி பகிர்வு சமூக ஊடகமான டிக் டொக்கில் இணைந்துள்ளார்.

டிக் டொக்கில் இணைந்துள்ள புதிய அரசியல் பிரபலமாக அவர் மாறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிக் டொக் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தற்போது, டிக் டொக் காணொளி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக மங்கள சமரவீர அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் வேட்மனுவை தாக்கல் செய்திருந்த மங்கள, பின்னர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன் நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகி இருக்க போவதாகவும் கூறியிருந்தார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தான் விலகவில்லை தொடர்ந்தும், அந்த கட்சியிலேயே இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் காலங்களில் அவர் மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

About VITHUSHA

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...