Home / சினிமா செய்திகள் / ஜிப்ரான் இசையில் பாடல் ஒன்றை பாடிய அனிருத்

ஜிப்ரான் இசையில் பாடல் ஒன்றை பாடிய அனிருத்

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வரும் அனிருத், தற்போது சிக்ஸர் படத்திற்காக ஜிப்ரான் இசையில் ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் அனிருத்.  இவர் இசை அமைப்பது மட்டுமல்லாது பாடல் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் ஜிப்ரான் இசையமைத்து வரும் ‘சிக்ஸர்’ படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.

இதுகுறித்து ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில், ‘எனது இசையில் அனிருத் முதன்முறையாக பாடியுள்ளார். “பாபா பிளாக் ஷிப்” என தொடங்கும் பாடலை பாடியுள்ளார்’. என பதிவிட்டுள்ளார்.

வைபவ் நடித்துள்ள ‘சிக்ஸர்’ படத்தை அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ் ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

 

About இனியவன்

x

Check Also

விக்ரம் 58 இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான்

மணிரத்தினத்தின் ராவணன் திரைப்படத்தை தொடர்ந்து, விக்ரமுடன் ஏ.ஆர் ரஹ்மான் மீண்டும் இணைந்து பணியாற்ற இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ...

%d bloggers like this: