Home / உள்நாட்டு செய்திகள் / ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு  தக்கபாடம் புகட்டுவேன் என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு  தக்கபாடம் புகட்டுவேன் என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளுக்கு விரைவில்    தக்கபாடம் புகட்டுவேன். என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர் காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எனது தந்தையும் தாயும் நானும் பாடுபட்டு வளர்த்தோம். இந்த கட்சியைத் தலை நிமிர செய்தோம். அத்தோடு நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் கட்சியாக இதனை வைத்திருந்தோம். ஆனால், இந்தக் கட்சியை இன்று நாசமாக்கிவிட்டார் மைத்திரி.

அதை விட முதலாவது நிலைக்கு நின்ற எனது தாய்க்கட்சி மைத்திரியின் சர்வாதிகார நடவடிக்கைகளினால் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கட்சியில் எனக்கு ஆதரவானவர்கள் வகித்த பதவிகளைப் பறித்தெடுத்துவிட்டு தனக்குப் பிடித்தமான – பொருத்தமில்லாத நபர்களுக்குப் பதவிகளை வழங்கியுள்ளார் மைத்திரி.

மேலும் வெளிநாடு செல்லும்போது கட்சியின் தலைமையகத்தை அவர் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இது அவரின் சர்வாதிகாரத்தின் உச்சநிலையைத் தொட்டுக் காட்டுகின்றது. எனவும் மைத்திரியின் இந்த நடவடிக்கைகளுக்கு விரைவில் உரிய பாடம் புகட்டுவேன் என தெரிவித்துள்ளார்

ஒன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுப்பேன். அல்லது கட்சியில் உள்ள எனது ஆதரவாளர்களை மீட்டெடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பொதுத்தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் – நல்லூர் தேர்தல் முடிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சி 5803 2458% ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 4700 19.91% அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4158 ...