Home / உள்நாட்டு செய்திகள் / ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்கள் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாணம் தற்போது இடம்பெற்று வருகின்றன.

ஊடகங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறைக்குள் அழைக்கப்பட்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாத் துறை அபிவிருத்தி, கிறிஸ்தவ விவகாரம், வனப்பாதுகாப்பு அமைச்சராக ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

உயர் கல்வி, நகர திட்டமிடல், நீர்ப்பாசன அமைச்சராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

காமினி ஜயவிக்ரம பெரேரா புத்தசாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சராக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்

தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமனம்.

மின்சக்தி, எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக வாணிபத்துறை, கூட்டுறவு அபிவிருத்தி, நீண்டகால இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றும் அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பத்தியுத்தீன் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

சுகாதார அமைச்சராக ராஜித சேனாரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சராக ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்

 

மாநகர சபை மற்றும் மேல் மாகாண சபை அபிவிருத்தி அமைச்சராக பட்டாலி சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

வீடமைப்பு மற்றும் கலாச்சார அமைச்சராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சராக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: