Home / உள்நாட்டு செய்திகள் / ஜனாதிபதி பற்றி பேஸ்புக்கில் போலி பிரச்சாரம் செய்த செய்த பல்கலைக்கழக மாணவன் கைது!!

ஜனாதிபதி பற்றி பேஸ்புக்கில் போலி பிரச்சாரம் செய்த செய்த பல்கலைக்கழக மாணவன் கைது!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனா சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாக பேஸ்புக்கில் பதிவிட்ட பல்கலைக்கழக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அபேவிக்ரம வீரசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான மாணவன் நகைச்சுவையாக பேஸ்புக்கில் பதிவு இட்டதாகவும் அவருக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் இதுமிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டிய காலமே தவிர நகைச்சுவைக்கான காலம்  இல்லை என கூறிய நீதிபதி பிணை கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ தொணிப்பொருளில் இராணுவத்தினர் ஊர்வலம்!!

“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி ஏ9 பிராதான ...

%d bloggers like this: