Home / உள்நாட்டு செய்திகள் / ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற “பூ அபிமானி” ஹரித ஹரசர” பாராட்டு விழா!

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற “பூ அபிமானி” ஹரித ஹரசர” பாராட்டு விழா!

புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தினால் சூழல் நேய தேசமொன்றை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “பூ அபிமானி” ஹரித ஹரசர சூழல் பாராட்டு விழா ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் திங்கள் கிழமை 18 பிற்பகல் கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெற்றது.

இலங்கையின் கனிய வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதன் மூலம் ”பேண்தகு எதிர்காலம் – அபிவிருத்தி அடைந்த நாட்டை” கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் தனது தேசத்திற்கான கடமைகளை நிறைவேற்றி கனிய வளங்களை பாதுகாப்பதற்காகவும் சுற்றாடலின் பொது நலனுக்காகவும் மேற்கொண்ட உன்னத பணிகளை பாராட்டி ஜனாதிபதியினால் அதிகாரிகளுக்கு பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டது.

புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தனித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புவிச்சரிதவியல் கொடி ஜனாதிபதியினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, புவிச்சரிதவியல் சுரங்க பணியகத்தின் தலைவர் அசேல இத்தவெல, பணிப்பாளர் நாயகம் கலாநிதி சீ.எச்.ஈ.ஆர்.சிறிவர்தனஎன பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: