Home / உள்நாட்டு செய்திகள் / ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம்!!

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம்!!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான கற்கை பீடத்தின் சமூகவியல் டிப்ளோமா பாடநெறியையும் குற்றவியல் டிப்ளோமா பாடநெறியையும் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (19) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 166 மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு, அதனை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதி  06 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான கற்கை பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஜி.பி.எம்.சந்ரகுமார, பேராசிரியர் மயூர சமரகோன், பேராசிரியர் டப்ளியு.எஸ்.விஜயகோன், பேராசிரியர் பிரனித் அபேசுந்தர உள்ளிட்ட பேராசிரியர்கள், கலாநிதிகள் உள்ளிட்ட கல்விமான்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்…

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை

வடக்கு மாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு ...

%d bloggers like this: