Home / உலகச் செய்திகள் / செல்போனுக்கு அடிமையான தனது மகளை தீ வைத்து எரித்த தந்தை

செல்போனுக்கு அடிமையான தனது மகளை தீ வைத்து எரித்த தந்தை

இந்தியாவில் செல்போனுக்கு அடிமையான தனது மகளை தந்தையே தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பால்கர் பகுதியை சேர்ந்தவர் முகமது மன்சூரி(40). இவரது  மகள்(16) எப்போதும் கையில் செல்போனுடன் இருப்பதை அவதானித்துள்ளார். இதனால் கோபமடைந்த தந்தை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது மகள் செல்போனை பார்த்து கொண்டிருந்தார். எவ்வளவோ சொல்லியும் அவரது மகள் கேட்கவில்லை.

இதனால் முகமது மன்சூரி மகளை கண்டித்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றியதில் முகமது மன்சூரி, மண்ணெண்ணெய்எடுத்து மகளின் உடலில் ஊற்றி தீ இட்டுள்ளார்.

உடல் முழுவதும் எரிய வேதனை தாங்க முடியாமல் சிறுமி கதறிய சத்தம் . சத்தம்கேட்டு வந்த பக்கத்தினர் தீயை அணைத்து முகமது மன்சூரியின் மகளை மீட்டனர்.

தற்போது சிகிச்சைக்காக மும்பை ஜே.ஜே. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுமி உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார். மேலும்  முகமது மன்சூரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

16 வயதுடைய சொந்த சகோதரியை கர்ப்பமாக்கிய 14 வயது சிறுவனுக்கு 30 ஆண்டுகள் சிறை

மலேசியாவில் 16 வயதுடைய தனது சொந்த சகோதரியை கர்ப்பமாக்கிய 14 வயது சிறுவனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ...

%d bloggers like this: