Home / இந்திய செய்திகள் / சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம்!!

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம்!!

சென்னையில் அடையாறு அருகே முக்கிய சாலையில் திடீரென பெரும் பள்ளம் உருவானதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

அடையாறு, கிண்டி இடையே உள்ள மத்திய கைலாஷ் பகுதியின் முக்கியச் சாலையில் நள்ளிரவில் திடீரென பெரும் பள்ளம் ஏற்பட்டது. 15 அடி ஆழமுள்ள இந்தப் பள்ளம் இரவு நேரத்தில் ஏற்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் தெரிவித்தும் காலை வரை அந்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதே மத்திய கைலாஷ் பகுதியில் 20 நாட்களுக்கு முன்னர் இதுபோன்ற பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பிரதமர் மோடிக்கு தனது பாடல் ஆல்பத்தை நேரில் சென்று அர்ப்பணித்த பாடகி!!

குஜராத் நாட்டுப்புறப் பாடகி கீதா ரபரி பிரதமர் மோடிக்கு தனது பாடல் ஆல்பத்தை நேரில் சென்று அர்ப்பணித்தார். இதனையடுத்து அவரை ...

%d bloggers like this: