Home / உலகச் செய்திகள் / சூறாவளி மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள-அமெரிக்கா

சூறாவளி மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள-அமெரிக்கா

அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சூறாவளி மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆக்லஹாமா, டெக்ஸாஸ், கான்ஸாஸ் மற்றும் மிசௌரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக சூறாவளி வீசியது. அடுத்தடுத்து 22 முறை வீசிய சூறாவளியால் காலநிலை மிகவும் குளிர்ச்சியாக மாறியது.

இதனால் சில இடங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆக்லஹாமாவின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

சூறாவளி, மழை மற்றும் வெள்ளம் காரணமாக மத்திய அமெரிக்க மாகாணங்களில் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாகாண அரசுகள் தெரிவித்துள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இந்திய விமானங்கள் செல்வதற்கான தடையை நீக்கி பாகிஸ்தான் அனுமதி!!

இந்திய விமானங்கள் பறக்கும் வகையில் தங்களது வான்வெளி எல்லையை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது . பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து ...

%d bloggers like this: