Home / சினிமா செய்திகள் / சூர்யாவின் 215 அடி கட்-அவுட் அகற்றம்

சூர்யாவின் 215 அடி கட்-அவுட் அகற்றம்

நடிகர் சூர்யா நடிப்பிலும், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்திலும் வெளியாக இருக்கும் பிரம்மாண்ட படம் என்.ஜி.கே. இந்தப் படத்துக்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. குறிப்பாக, நடிகர் சூர்யா ரசிகர்கள், பெரும் எதிர்பார்ப்போடு, இந்தப் படம் ரிலீஸ் ஆவதை வரவேற்கின்றனர்.

இந்த பட ரிலீசை கொண்டாடும் வகையில் அவர்கள், சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் திருத்தணியில், நடிகர் சூர்யாவுக்கு 215 அடி உயர கட்-அவுட் வைத்திருக்கின்றனர். அந்த கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யவும், அவர்கள் தயாராகி இருக்கின்றனர்.

இந்நிலையில் வான் உயர்ந்த இந்த கட்-அவுட் முறையாக அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கட்-அவுட்டை அகற்றினர். மிக உயர்ந்த கட்-அவுட் வைத்ததாக சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் தற்போது கட்-அவுட் அகற்றப்பட்டது அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

About இனியவன்

x

Check Also

செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட்-2 எடுக்க வேண்டும்: பார்த்திபன்

ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் எடுக்க வேண்டும் என்பது என் விருப்பம் எனத் தெரிவித்துள்ளார் பார்த்திபன். பார்த்திபன் ...

%d bloggers like this: