Home / உலகச் செய்திகள் / சுவிற்சர்லாந்தின் வாக்கெடுப்பு முடிவு

சுவிற்சர்லாந்தின் வாக்கெடுப்பு முடிவு

சுவிற்சர்லாந்தில் தேசியரீதியில் நடைபெற்று முடிந்த அபிப்பிராய வாக்கெடுப்புக்களில் முக்கியமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்யபட்ட ஒப்பந்த்த்தினை நிராகரிக்ககோரும் வாக்கெடுப்பிற்கு சுவிற்சர்லாந்து வாழ்மக்கள் மக்கள் 61.7% விகித வாக்குகளை வழங்கி ஐரோப்பிய ஒண்றியத்துடன் செய்பட்ட ஒப்பந்த்தினை தொடர்ந்து பேணும் ஆணையை சமஷ்டி அரசிற்கு கொடுத்துள்ளனர்.

இவ்வகையில் தொடர்ந்தும் ஐரோப்பிய நாட்டில் வாழும் மக்களும் சுவிறசர்லாந்து பிரஜைகளும் வேலைவாய்ப்புக்காகவோ வாழ்விடவசதிக்காகவோ சுயாதினமாக தாம் வசிக்கப்போகும் நாட்டினை தெரிவு செய்யும் உரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் தொழிலாளர்களின் ஊதியம் குறிப்பிட்ட தொகைக்கு கீழாக இருக்கமுடியாது என்பதனையும் வாக்கெடுப்பு முடிவுகள் உறுதி செய்துள்ளது.

சுவிற்சர்லாந்து ஏற்கனவே கையெழுத்திட்ட ஒப்பந்தங்களிற்கு இணங்க வணிகம், துறைசார் ஆராய்ச்சி பணிகளையும் இணைந்து மேற்கொள்ளவும் மக்களின் ஆணை கிடைக்கபட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து சமூக ஜனநாயகக்கட்சியின் தமிழ் பேசும் அரசியல்வாதிகளினால் கூட்டாக வெளியிட்ட செய்தியினையும் செவிமெடுத்து வாக்களித்த தமிழ் வாக்காளர்களிற்கு ஓர் பெரிய நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

தொடர்ந்து வரும்டகாலங்களிலும் எம்முடன் தொடர்ந்து பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எமது அரசியல் பயணங்களை தொடர்கின்றோம்.

About VITHUSHA

x

Check Also

பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் மேலதிக தகவல்

பிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் ...