Home / உலகச் செய்திகள் / சுற்றுலாப்பயணிகள் சென்ற சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து-5 பேர் பலி!!

சுற்றுலாப்பயணிகள் சென்ற சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து-5 பேர் பலி!!

ஹோண்டுராஸ் நாட்டில் சுற்றுலாப்பயணிகள் சென்ற சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் பலியாகியுள்ளனர்.

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில், ரோட்டன் தீவிலிருந்து ((Roatan island)) 80 கி.மீ தொலைவிலுள்ள சுற்றுலாத்தளமான ட்ருஜில்லோ ((Trujillo)) துறைமுக நகருக்கு, சிறிய ரக விமானம் ஒன்று சுற்றுலாப்பயணிகளுடன் புறப்பட்டது.

இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 சுற்றுலாப்பயணிகளும், விமானி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், உயிரிழந்த பயணிகள் நால்வரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | உலக அளவில் ஒரு கோடியே 15 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று

உலக அளவில் புதிதாக ஒரு லட்சத்து 75ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே ...