Home / சினிமா செய்திகள் / சுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசி பலரது கவனத்தையும் ஈர்த்த நடிகர் விஜய்

சுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசி பலரது கவனத்தையும் ஈர்த்த நடிகர் விஜய்

சென்னை: சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது பழி போட வேண்டுமோ அதை செய்யாமல், லாரி டிரைவர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுகின்றனர் என நடிகர் விஜய் கூறினார்.

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘பிகில்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் விஜய் பேசியதாவது: வாழ்க்கையும் ஒரு கால்பந்து போட்டி தான். நாம் கோல் போடுறதையும் தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். நம் கூட இருப்பவர்களே சேம்சைடு கோல் போடுவார்கள். யாருடையும் அடையாளத்தை எடுத்துக்காதீங்க.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

உழைத்தவர்களை மேடை ஏற்றி அழகு பார்க்கும் முதலாளி, ரசிகர்கள் தான். எதிரியாக இருந்தாலும் அவரை மதிக்க வேண்டும். அரசியலில் புகுந்து விளையாடுங்கள். ஆனால் விளையாட்டில் அரசியலை கொண்டு வராதீர்கள்.

பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என் ஆறுதல். யார் மீது பழி போட வேண்டுமோ அதை செய்யாமல், லாரி டிரைவர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுகின்றனர். இது போன்ற சமூக பிரச்னைக்கு ‘ஹேஷ் டேக்’ போட வேண்டும். சமூக வலை தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவர்களை அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும். இவ்வாறு விஜய் கூறினார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

பேனரால் இறந்த சுபஸ்ரீ குறித்து விஜய் கூறிய கருத்திற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இசை வெளியீட்டு விழாவை விஜய் மிகச் சரியாக பயன்படுத்தியுள்ளார். தாய் மொழி மீது கை வைத்தால் மன்னிக்கமாட்டோம். இவ்வாறு சென்னையில் கமல் ஹாசன் அளித்த பேட்டியில் கூறினார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

எமி ஜாக்சன் ஆண் குழந்தை பிறந்தது

மதராசப்பட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எமி ஜாக்சன் ஆண் குழந்தை ஒன்றுக்குத் தாயாகினார். இவர் தொழிலதிபரான ஜோர்ஜ் ...

%d bloggers like this: