Home / சினிமா செய்திகள் / சுந்தர்.சியுடன் இணைகின்றார் ஆர்யா.

சுந்தர்.சியுடன் இணைகின்றார் ஆர்யா.

இயக்குனர் சுந்தர்.சி யின் `அரண்மனை,’ `அரண்மனை-2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து `அரண்மனை-3’ திரைப்படம் உருவாகி வருகிறது.
இதில் சுந்தர் சி, ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு, சம்பத்குமார், நந்தினி, விச்சு, மனோபாலா, சாக்சி அகர்வால் மற்றும் பலர் இணைந்து நடிக்கிறார்கள்.

சத்யா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு யு.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். குஜராத் அருகே ராஜ்கோட் என்ற இடத்தில், வான்கெனர் பேலஸ் என்ற அரண்மனையில் படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. அங்கு 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

About Radio tamizha

x

Check Also

RADIOTAMIZHA | எஸ்.ஜானகி அம்மா நலமாக உள்ளார் – ஜானகி மகன் தகவல்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி(82). 60 ஆண்டுகளாக சினிமாவில் கான குயிலாகவே பாடி பறந்தார். 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் ...