Home / உள்நாட்டு செய்திகள் / சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை..!!

சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை..!!

டெங்குக் காய்ச்சலுக்காக அஸ்பிரின் உள்ளிட்ட சில மரு​ந்துவகைகளைப் பயன்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அஸ்பிரின் மற்றும் ஏனைய அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் பாவிப்பதன் மூலம் டெங்கு நோயாளர்களின் உடல்நிலை மோசமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது பல மாவட்டங்களில் டெங்கு நோய்த் தாக்கம் குறைவடைந்துள்ள போதிலும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் நோய்த்தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அஸ்பிரின், இபுப்ரோபென், டைக்லோபினொக் சோடியம் மற்றும் மெபனமிக் அசிட் உள்ளிட்ட சில மருந்துவகைகளை டெங்கு நோயாளர்கள் பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

இதனால் டெங்கு நோயாளர்களுக்கு இத்தகைய மருந்துகளைப் பரிந்துரைப்பதை வைத்தியர்கள் தவிர்க்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | லெபனான் வெடிச்சம்பவத்தில் 14 இலங்கையர்கள் காயம்

லெபனானில் இடம்பெற்ற பாரிய வெடிச்சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக லெபனானில் ...