Home / உள்நாட்டு செய்திகள் / சுதந்திர தினமான இன்று கறுப்பு கொடிகட்டி துக்கதினமாக யாழ் பல்கலையில் அனுஷ்டிப்பு!

சுதந்திர தினமான இன்று கறுப்பு கொடிகட்டி துக்கதினமாக யாழ் பல்கலையில் அனுஷ்டிப்பு!

71வது சுதந்திர தினமான இன்றைய தினத்தை துக்கதினமாக அனுஷ்டிக்கும் நோக்கில் யாழ் பல்கலைக்கழக முகப்பு பகுதிகளில் கறுப்புக்கொடிகள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன .

”Feb-04 எமக்கு எப்போது சுதந்திரம்?” என்றவாறு எழுதப்பட்ட கறுப்பு கொடியிலான பதாகைகளும் பல்கலைக்கழக வளாக முன்றலில் கட்டிவிடப்பட்டிருக்கின்றது. பல்கலையின் உட்பகுதி முகப்பில் தேசியக்கொடி ஏற்றிவிடப்பட்டிருக்கின்ற போதிலும் பல்கலை முன்வீதியெங்கும் துக்கதினத்தினை வெளிப்படுத்தும் விதமாக கறுப்புகொடிகள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.

மேலும் இன்றைய தினத்தை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி கேப்பாப்புலவு  மற்றும் கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும்  மக்கள் போராட்டங்களில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தாமும் அவர்களுக்கு ஆதராக போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: