Home / உலகச் செய்திகள் / சீனாவுக்கு போட்டியாக இணையும் இந்தியா, ஜப்பான், இலங்கை

சீனாவுக்கு போட்டியாக இணையும் இந்தியா, ஜப்பான், இலங்கை

இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கை அரசுகள் இணைந்து கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.

இந்திய பெருங்கடலில் நடைபெறும் கடல்வழி வணிகத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையின் மிக பெரிய துறைமுகமான கொழும்பு துறைமுகத்தினை மேம்படுத்த இந்தியா, இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைய உள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தம் சில நாட்களில் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ள இந்த திட்டத்தில் குறிப்பாக கொழும்பு துறைமுகத்தில் சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட தெற்கு பகுதிக்குள் பெரிய சரக்கு கப்பல்கள் நுழையும் வண்ணம் ஆழப்படுத்தப்பட உள்ளது.

ஆசிய உட்பட பல பகுதிகளில் நடக்கும் வணிகத்தில் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் சீனா தனது முக்கியத்துவத்தை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு போட்டியாக இந்த 3 நாடுகளும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ மருத்துமனையில் ஏற்பட்ட பயங்கர  குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷே ...

%d bloggers like this: