Home / உலகச் செய்திகள் / சீனாவில் டைனோசர் முட்டை ஒன்றை கண்டுபிடித்த 10 வயது சிறுவன்-காணொளி உள்ளே

சீனாவில் டைனோசர் முட்டை ஒன்றை கண்டுபிடித்த 10 வயது சிறுவன்-காணொளி உள்ளே

சீனாவில், நதிக்கரையோரம் மண்ணில் புதைந்து கிடந்த டைனோசர் முட்டை ஒன்றை 10 வயது சிறுவன் கண்டுபிடித்துள்ளான்.

குயாங்டாங்கில் வசித்து வரும் சாங் யாங்ஷீ (Zhang Yangzhe) என்ற சிறுவன் டைனோசர்களை பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளான்.

அண்மையில், அங்குள்ள நதிக்கரையோரம் யாங்ஷீ விளையாடிக்கொண்டிருந்தபோது, பெரிய அளவிலான முட்டை வடிவத்திலிருந்த கல்லை கண்டுபிடித்துள்ளான்.

இது சாதாரண கற்களை காட்டிலும் வித்தியாசமாக இருப்பதை அறிந்து கொண்ட சிறுவன், தனது தாய் மூலம் உள்ளூர் அருங்காட்சியகத்தை தொடர்பு கொண்டுள்ளான்.

அதனைத்தொடர்ந்து முட்டையை ஆய்வு செய்ததில், அது 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் முட்டை என்பது உறுதியானது.

சிறுவன் கூறிய அதே இடத்தில், ஆராய்ச்சியாளர்கள் தோண்டியபோது, மேலும் 10 முட்டைகள் கிடைத்தன. இந்த முட்டைகளை கொண்டு, டைனோசர்கள் பற்றிய பல அரிய தகவல்களை கண்டறிய முடியும் என தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள், உலகளவில் ஹேயுயான் (Heyuan ) நகரில் மட்டும் அதிகப்படியாக 18,370 டைனோசர் முட்டை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இளவரசர் ஹரி, மேகன் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவிப்பு!!

பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பில் இருந்து  இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் விலகுவதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக ...

%d bloggers like this: