Home / உலகச் செய்திகள் / சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு!

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு!

சீனாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து அந்நாட்டின் மக்கள் தொகை ஆய்வு மைய நிபுணர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

1961-ஆம் ஆண்டுக்குப் பின் முதன் முறையாக சீனாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்தது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டே ஒரே குழந்தை என்ற திட்டம் ஒழிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டும் சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதை அடுத்து, இது மக்கள் தொகை சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சீனாவில் இளம் தலைமுறையில் ஒரு தரப்பினர் குழந்தைகளை வளர்ப்பது சோர்வு தரக்கூடிய ஒரு முறையாகப் பார்ப்பதும், மற்றொரு தரப்பினர் தாங்களே தங்கள் குடும்பத்தின் ஒரே வாரிசு என்பதால் பரம்பரையை உருவாக்கும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப அவசர நிலைப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!

அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டிய நிதியைப் பெறுவதற்காக அவசர நிலைப் பிரகடனத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் ...

%d bloggers like this: