Home / உலகச் செய்திகள் / சிறைச்சாலையில் கைதிகள் கலவரம் – 32 பேர் கொலை

சிறைச்சாலையில் கைதிகள் கலவரம் – 32 பேர் கொலை

தஜிகிஸ்தான் நாட்டில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 32 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் துஷான்பேவுக்கு அருகே உள்ளது வாக்டட் சிறை. அங்கு ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரும் உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று 3 காவலர்கள் மற்றும் ஐந்து கைதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்ததை அடுத்து கலவரம் மூண்டது.

இதை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு சென்று கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். முயற்சி பலனளிக்காததால் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 24 கைதிகள் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஸ்பெயின் நாட்டில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய வாள் கண்டுபிடிப்பு!!

ஸ்பெயின் நாட்டில் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஜோர்க்கா மற்றும் மெனோர்க்கா என்ற ...

%d bloggers like this: