Home / உலகச் செய்திகள் / சிரியா – ஈராக் எல்லை பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கடும் தாக்குதல்!

சிரியா – ஈராக் எல்லை பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கடும் தாக்குதல்!

சிரியா – ஈராக் எல்லை பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கடும் எதிர் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஆதரவு படைகள் தெரிவித்துள்ளன.

மேலும் சிரியாவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள எல்லை பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் 600 பேர் வரையில் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு சமமாக அமெரிக்க ஆதரவு படைகளும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈராக் மற்றும் சிரியாவின் பெரும்பாலான பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர்களின் பலம் உச்சத்தில் இருந்துள்ளது.

இதற்கு பின்னர் கடுமையான தோல்விகளைச் சந்தித்த ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் இன்னும் 14 ஆயிரம் முதல் 18 ஆயிரம் பேர் வரை இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை கணக்கிடுகிறது.

மேலும் அவர்களில் 3,000 பேர் வரை வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

மிகப் பழமையான மசூதியின் சிதிலங்கள் கண்டுபிடிப்பு!!

இஸ்ரேலில் மிகப் பழமையான மசூதியின் சிதிலங்களை நெகவ் பாலைவனத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ரஹத் நகருக்கு அருகே உள்ள நெகவ் ...

%d bloggers like this: