Home / உலகச் செய்திகள் / சிங்கப்பூர் அரசு தமிழ் மொழியினை பெருமையினை கௌரவித்து வருகிறது

சிங்கப்பூர் அரசு தமிழ் மொழியினை பெருமையினை கௌரவித்து வருகிறது

இரண்டு மலையாளிகள் சந்தித்தால் மலையாளத்தில் பேசுவார்கள். இரண்டு கன்னடர்கள் சந்தித்தால் கன்னடத்தில் பேசுவார்கள்.

இரண்டு தமிழர்கள் சந்தித்தால் மட்டும் ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்பது புகழ் பெற்ற நகைச்சுவை.

தமிழகத்தில் தமிழ் மொழியின் நிலை தேய்பிறையாகிக் கொண்டிருக்க, சிங்கப்பூர் அரசு தமிழை மெச்சி கௌரவித்து வருகிறது.

ஏழு கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் வியாபார நிறுவனங்களின் பெயர்ப் பலகை ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது. இதை தமிழில் எழுத அரசு சட்டம் போட வேண்டிய நிலை உள்ளது.

இதேபோல் தமிழகத்தில், தமிழ் மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து என அறிவித்துத் தான் தமிழை காக்க வேண்டிய நிலை உள்ளது.

சிங்கப்பூரில் 4 ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. அங்குள்ள கல்விக் கூடங்களிலும் தமிழ் தாய் மொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது. சிங்கப்பூர் நாட்டின் பணத்தாள்களிலும் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூரை நவீனமயமாக்கிய தமிழ் சமூகத்தினர் என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா ஒன்று அண்மையில் சிங்கப்பூரில் நடந்தது.

இதனை வெளியிட்டுப் பேசிய சிங்கப்பூரில் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

இந்த வெளியீட்டு விழாவில் சிங்கப்பூர் நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஈஸ்வரன், சிங்கப்பூரில் தமிழ் என்றும் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என அரசு தீர்மானம் கொண்டுள்ளது.

அதனால் தான் பார்லிமெண்டில் அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகவும், பயிற்று மொழியாக கல்விக் கூடங்களிலும் உள்ளது.

இங்குள்ள இளைஞர்களிடம் தமிழை கொண்டு சேர்த்து அதை என்றும் துடிப்புடன் வைத்திருக்க வேண்டும். எனப் பேச, கூட்டத்துக்கு வந்திருந்தவரின் கைதட்டல் அடங்க வெகுநேரம் பிடித்தது.

About அகமுகிலன்

x

Check Also

பயங்கரவாதத்தை ஆதரித்த அவுஸ்திரேலிய செனட்டர் மீது முட்டைத் தாக்குதல்!

49 பேர் மரணமடைந்த நியூசிலந்துப் பள்ளிவாசல் தாக்குதல்களைப்பற்றி அஸ்திரெலிய செனட்டர் ஃப்ரேஷர் அன்னிங்  வெளியிட்ட கருத்துகள் உலகளவில் விமர்சிக்கப்பட்டது. அந்தச் சர்ச்சைக்கு மத்தியில் ...

%d bloggers like this: