Home / உள்நாட்டு செய்திகள் / சிகிரியாவை மூன்று தினங்களுக்கு கட்டணமின்றி பார்வையிட வாய்ப்பு!!

சிகிரியாவை மூன்று தினங்களுக்கு கட்டணமின்றி பார்வையிட வாய்ப்பு!!

விசாக பூரணை மற்றும் தேசிய தொல்பொருள் தினம் என்பனவற்றின் காரணமாக  உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் சிகிரியாவை மூன்று தினங்களுக்கு கட்டணமின்றி பார்வையிடுவதற்கு நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 20ஆம் திகதிவரை இந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று சிகிரியா திட்ட முகாமையாளர் ஓய்வுபெற்ற மேஜர் அநுர நிஷாந்த தெரிவித்துள்ளார்.

சிகிரியாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ள பகுதிகளையும் இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது

அத்தோடு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்தப் பகுதியை இலவசமாக பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலாத்துறையினர் பாதுகாப்புக்காக இராணுவத்தினர், விமானப் படையினர் மற்றும் சிகிரியா காவல்துறையினர் ஆகியோர் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: