Home / உலகச் செய்திகள் / சவூதி இளவரசர் போல ஆடைகளை அணிந்து பண மோசடி செய்தவருக்கு 18 ஆண்டுகள் சிறை!!

சவூதி இளவரசர் போல ஆடைகளை அணிந்து பண மோசடி செய்தவருக்கு 18 ஆண்டுகள் சிறை!!

அமெரிக்காவில், சவூதி இளவரசர் போல நடித்து, கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நபருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த அந்தோணி ஜிக்னாக் (Anthony Gignac) எனும் அவர், சவூதி இளவரசர் போல ஆடைகளை அணிந்தும், போலியான ஆவணங்களைக் கொண்டும் ஏராளமானோரிடம் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

மோசடி செய்த பணத்தில் விதவித ஆடைகள், விமான பயணம், பாதுகாப்புக்கு பணி ஆட்கள் என ராஜ வாழ்க்கையை நடத்திவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அவர் சிக்கிய நிலையில், மோசடி வெளிச்சத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, 30 ஆண்டுகளில், சுமார் 55 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஸ்பெயின் நாட்டில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய வாள் கண்டுபிடிப்பு!!

ஸ்பெயின் நாட்டில் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஜோர்க்கா மற்றும் மெனோர்க்கா என்ற ...

%d bloggers like this: