Home / உலகச் செய்திகள் / சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு!!

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு!!

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பாறை மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் முகம்மட் ரிஹாஸ் உவைஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் மருதமுனையைச் சேர்ந்த மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சவுதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உணவு உண்பதற்காக மூவரும் சவுதி அதிவேகப் பாதை வழியே சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த கார் இவர்கள் சென்ற வாகனத்துடன் மோதி விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய மூவரூம் மருதமுனையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், ஏனைய இருவரில் ஒருவரின் கால் ஒன்று அகற்றப்பட்டுள்ளதாகவும் மற்றையவர் கோமா நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சுற்றுலாப்பயணிகள் சென்ற சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து-5 பேர் பலி!!

ஹோண்டுராஸ் நாட்டில் சுற்றுலாப்பயணிகள் சென்ற சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் பலியாகியுள்ளனர். மத்திய அமெரிக்க ...

%d bloggers like this: