Home / உள்நாட்டு செய்திகள் / சர்வதேச நிறுவனங்களின்பிரதிநிதிகளை கண்காணிக்குமாறு மஹிந்த பணிப்பு

சர்வதேச நிறுவனங்களின்பிரதிநிதிகளை கண்காணிக்குமாறு மஹிந்த பணிப்பு

எதிர்வரும் நாட்களில் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி என்பனவற்றுக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பிரஜைகள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை கண்காணிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தெற்கின் இணயை ஊடகமொன்று இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சில் தற்பொழுது கடமையாற்றி வரும் தமக்கு விசுவாசமானவர்களைக் கொண்டு கண்காணிப்பு செய்யுமாறு மஹிந்த பணிப்புரை விடுத்துள்ளார்.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்துமாறு உத்தரவிப்பட்டுள்ளது.

மத்திய வங்கிக்கும், நிதி அமைச்சிற்கும் வரும் வெளிநாட்டு பிரமுகர்கள் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் திரட்டப்பட்டு மஹிந்த தரப்பிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவல்களை திரட்டி தேர்தல் மேடைகளில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

About Radio tamizha

x

Check Also

RADIOTAMIZHA | லெபனான் வெடிச்சம்பவத்தில் 14 இலங்கையர்கள் காயம்

லெபனானில் இடம்பெற்ற பாரிய வெடிச்சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக லெபனானில் ...