Home / உள்நாட்டு செய்திகள் / சர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த வருடம் இலங்கையில்

சர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த வருடம் இலங்கையில்

அழிவடையும் அச்சுருத்தல்களுக்கு உள்ளாகியுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதற்காக மக்களை விழிப்பூட்டும் நோக்கில் இடம்பெறும் சர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளது.

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இம்மாநாடு 2019ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன் 183 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள்இ சர்வதேச அமைப்புகள் அரச சார்பற்ற நிறுவனங்கள்இ சுற்று சூழல் அமைப்புகள் உலகளாவிய ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட நாலாயிரத்தை அண்மித்தோர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

சர்வதேச மட்டத்திலான சைட்டீஸ் சமவாயம் எனப்படும் அழிவடையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வன விலங்குகளினதும் தாவரங்களினதும் சர்வதேச வணிகம் பற்றிய சமவாயம் 1973ஆம் ஆண்டு வொஷிங்டன் நகரில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வின்போதே கைச்சாத்திடப்பட்டுஇ 1975 முதல் அமுல்படுத்தப்பட்டதுடன்இ 1979ஆம் ஆண்டில் இலங்கை இச்சமவாயத்தில் இணைந்துகொண்டது.

இலங்கையின் வனப்பிரதேசத்தை மேம்படுத்துவதற்கும்இ வன விலங்குகளையும் உயிர் பல்வகைமையை பாதுகாப்பதற்கும் பேண்தகு அபிவிருத்தி கொள்கைகளின் ஊடாக ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் பாரிய வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுவரும் தருணத்தில் இம்மாநாடு இலங்கையில் இடம்பெறுவது விசேட அம்சமாகும்.

மாநாட்டின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்னவின் தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வாஇ ஜோன் அமரதுங்கஇ காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோரும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும்இ பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

About இனியவன்

x

Check Also

யாழ் பொலிசாரின் பித்தலாட்டம்?

வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் இரவு வீதியால் பயணித்துக்கொண்டிருந்த பொதுமகனை கடந்திச்சென்ற கும்பலொன்று அவரிடமிருந்த உடமைகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவமொன்று கடந்த ...

%d bloggers like this: